GTvsRR : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பவுலிங் தேர்வு..!
ஐபிஎல் தொடரின் இன்றைய GT vs RR போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. குஜராத் அணி, 3 போட்டியில் வெற்றி பெற்று 3-வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கின்றன.
இதுவரை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் குஜராத் அணி வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு அதிரடியாக விளையாடும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி (பிளேயிங் லெவன்):
விருத்திமான் சாஹா(w), சுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(c), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (பிளேயிங் லெவன்):
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்