ஐபிஎல் முதல் தகுதிச்சுற்று: சென்னை, குஜராத் யாருக்கு வாய்ப்பு அதிகம்.!

MSD-Hardik Qualify

இன்று குஜராத்-சென்னை அணிகளுக்கிடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டியில் இரு அணிகளுக்கும் இருக்கும் வாய்ப்பு குறித்து இங்கே  பார்க்கலாம்…

ஐபிஎல் 2023 தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது, லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளுக்கான பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. லீக் சுற்று போட்டிகளின் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் பிளேஆப் க்கு முன்னேறியுள்ளன.

Playoffs2023
Playoffs2023 [Image-Twitter/@IPL]

பிளேஆப் சுற்று போட்டிகளில் முதல் 3 போட்டிகள் இறுதிக்குள் நுழைய  நடத்தப்படுகிறது. இதில் முதல் தகுதிச்சுற்று போட்டியில், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதுவது வழக்கம். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக தகுதி பெறும்.

தோல்வியுறும் அணிக்கு 2-வது தகுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இரண்டாவது போட்டியான வெளியேற்று சுற்று போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4-வது இடங்களைப் பெற்ற அணிகள் மோதும், இதில் தோல்வியுற்ற அணி வெளியேறிவிடும். வெற்றி பெற்ற அணி இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறும்.

IPL Trophy23Final
IPL Trophy23Final [Image-BCCI-IPL]

2-வது தகுதிச்சுற்றில், வெளியேற்று சுற்றில் வெற்றி பெற்ற அணியும், முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வியுற்ற அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் களம் காணுகின்றன. இதில் இவ்விரு அணிகளுக்கும் உள்ள வெற்றி வாய்ப்புகள் பற்றி பார்க்கலாம்…

குஜராத்டைட்டன்ஸ்(GT):

அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி இந்த முறையும் அதே உத்வேகத்துடன் களமிறங்கியது. நடப்பு ஐபிஎல்-இல் சேஸிங்கில் அதிக முறையாக 6 முறை வென்றுள்ள குஜராத் அணி, முதல் பேட்டிங்கில் 4 முறையும் வென்றுள்ளது. இதனால் இன்று குஜராத் அணி சேஸிங் செய்யும் போது கூடுதல் வாய்ப்பாக அமையும்.

Gill CENTury QUalify
Gill CENTury QUalify [Image- Twitter/@IPL]

மேலும் சென்னை அணியுடன் இதுவரை குஜராத் அணி மோதிய 3 போட்டிகளிலும் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. நடப்பு ஐபிஎல் தொடரிலும் முதல் போட்டியில் சென்னை அணியுடன் மோதியதில் குஜராத் அணியே வென்றுள்ளது. தொடக்க வீரர் கில் அடுத்தடுத்து சதமடித்து பார்மில் இருக்கிறார், மேலும் சஹா, விஜய் ஷங்கர், மில்லர், பாண்டியா ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால் குஜராத் அணிக்கு நல்ல ஸ்கோரை எட்ட அது வழிவகுக்கும்.

GT Bowl Q
GT Bowl Q [Image- Twitter/@GT]

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஷமி மற்றும் ரஷீத் கான் இருவரும் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 24 விக்கெட்களுடன் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றனர். குஜராத் அணியில் ஷமி, ரஷீத், நூர் அஹமது, மோஹித் ஷர்மா என பந்துவீச்சு பலமான அணியாகவே கருதப்படுவதால் சென்னை அணிக்கு சற்று மிரட்டலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Shankar GT
Vijay Shankar GT [Image- Twitter/@IPL]

குஜராத் அணிக்கு பேட்டிங்கிலும் கடைசி வரிசை வீரர்கள் வரை அதிரடி காட்ட காத்திருக்கின்றனர். இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சம வலிமையுடன் களமிறங்கும் குஜராத் அணி, சென்னையுடன் வென்று  இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக செல்ல முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை குஜராத் அணி முதன்முறையாக இங்கு களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

GT Qualify
GT Qualify [Image- Twitter/@GT]

மேலும் இந்த மைதானத்தில் சுழற்பந்துக்கு ஏற்ற வகையில் இருக்கும் என கூறப்படுவதால் பேட்டிங்கில் முதலில் களமிறங்கி 180 ரன்கள் வரை குவித்தால் அது இரண்டாவது பேட் செய்யும் அணிக்கு கடினமாகவே இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK):

ஐபிஎல்லில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி, கடந்த ஐபிஎல் 2022 தொடரில் பிளேஆப்-க்கு கூட முன்னேறவில்லை ஆனால் இம்முறை அதிலிருந்து மீண்டு 2-வது அணியாக பிளேஆப்-க்கு முன்னேறியுள்ளது. சென்னை அணியில் இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடர் என்று சில கருத்துகள் நிலவி வருகின்றன.

CSK Qualifierone
CSK Qualifierone [Image-CSK]

இதனால் தோனிக்காக அவரது கடைசி ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று பரிசளிக்கவேண்டும் என சிஎஸ்கே அணி வீரர்கள் கவனமுடன் விளையாடி வருகின்றனர். ஆரம்பத்தில் பந்துவீச்சில் சில குறைகள் இருந்தாலும் அதனை சரிசெய்து தற்போது ஒரு அணியாக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

Rutu-Conway Bat
Rutu-Conway Bat [Image=Twitter/@CSK]

பேட்டிங்கில் அதிரடி காட்டி வரும் ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் இன்று சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுத்தால், இன்று சென்னை அணியின் ஸ்கோர் கணிசமாக உயரும். அதிரடியில் டுபே, ரஹானே,  மொயின் அலி, ராயுடு, ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் என அருமையான பேட்டிங் வரிசையை சென்னை அணி கொண்டுள்ளது.

Dhonijaddu MSD
Dhonijaddu MSD [Image-Twitter/@CSK]

இதனால் இந்த சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி, முதலில் பேட் செய்து குஜராத் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்தால் சிஎஸ்கேவிற்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது. குஜராத் அணி முதன்முறையாக இந்த சேப்பாக்கத்தில் களம் காணுகிறது, மேலும் சொந்த மைதானத்தில் சென்னை அணியின் வெற்றி சதவீதம் (70%) அடிப்படையில் இதில் சிஎஸ்கே அணிக்கு அதிக வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

CSK Bowl
CSK Bowl [Image -Twitter/@CSK]

பந்துவீச்சிலும் தேஷ்பாண்டே அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார், தீபக் சஹர், பதிரானா ஆகியோர் டெத் ஒவர்களிலும் மிரட்டி வருகின்றனர். ஜடேஜா, தீக்ஷனா, மொயின் அலி போன்ற ஸ்பின் பவுலர்களும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருப்பதால் இரு அணியிலும் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் எதிரணி பேட்ஸ்மன்களுக்கும் இடையே பலத்த சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சை சமாளித்து, பந்து திரும்புவதை கணித்து ஸ்கோர் செய்தால் அந்த அணிக்கே இன்று கூடுதல் பலமாக அமையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்