IPL2023: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா; சென்னை-குஜராத் அணிகள் மோதல்.!

Published by
Muthu Kumar

இன்று தொடங்கும் 16-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர், இன்று குஜராத் அகமதாபாத்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர், இன்று தொடங்கி மே 21 வரை கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேல்  நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

கடந்த ஆண்டு அறிமுகமான ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, கடந்த ஐபிஎல் 2022இல் சாம்பியன் பட்டம் வென்றது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, கடந்த ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது, இதனால் இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் சிஎஸ்கே அணி களமிறங்கிகிறது.

சிஎஸ்கே அணியில் ருதுராஜ், கான்வே, மொயீன் அலி, ராயுடு, டுபே, தோனி , ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹர், ஆகியோருடன் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சம வலிமையுடன் காணப்படுகிறது. குஜராத் அணியில் ஹர்டிக் பாண்டியா, ரஷீத் கான், சுப்மன் கில், வில்லியம்சன், மில்லர், தீவட்டியா, பெர்குசன், ஷமி என சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே(உத்தேச அணி): டெவன் கான்வே, ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், டுபே, ஜடேஜா, டுவைன் பிரிட்டோரியஸ், எம்எஸ் தோனி(C/W), சாஹர், சிமர்ஜீத் சிங்

குஜராத் டைட்டன்ஸ்(உத்தேச அணி): சுப்மன் கில், விருத்திமான் சாஹா (W), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (C), மேத்யூ வேட், ராகுல் தீவட்டியா, ரஷித் கான், சாய் கிஷோர், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப், முகமது ஷமி

Published by
Muthu Kumar

Recent Posts

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…

2 hours ago

பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…

3 hours ago

“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…

4 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…

4 hours ago

சூர்யாவின் “ரெட்ரோ” பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!

சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…

5 hours ago

ஆபாச பேச்சு: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கைது!

கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…

5 hours ago