இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா.., முதல் போட்டியில் KKR-RCB மோதல்.!

18ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் இன்று (மார்ச் 22) தொடங்குகிறது.

TATAIPL 2025 begin

கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்த 34 போட்டிகளில் (IPL 2024 வரை), கொல்கத்தா அணி  20 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வென்றுள்ளன.

ஈடன் கார்டன்ஸில் மட்டும் கொல்கத்தா அணி, 7-4 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 போட்டிகளில் கொல்கத்தா 6 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய ஆட்டத்தின் போது, மழை பாதிப்பு இல்லையெனில், அதிக ஸ்கோர் கொண்ட ஒரு அற்புதமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். இந்த ஐபிஎல் திருவிழாவின் தொடக்கமாக, இன்றைய முதல் போட்டி ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஐபிஎல் தொடக்க போட்டியானது நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும். அதேபோல, அந்த மைதானத்தில் மட்டுமே ஐபிஎல் தொடக்க விழாவும் நடைபெறும். இன்றைய போட்டிக்கு முன்னதாக தொடக்க விழா மாலை 5:30 முதல் 7:00 மணி வரை நடைபெறும், அதைத் தொடர்ந்து 7:30 மணிக்கு முதல் போட்டி தொடங்கும். இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா ஆப் மூலமாகவும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

ஐபிஎல் தொடக்க விழா:

பிரபல பாடகர்களின் நிகழ்ச்சி:

பாலிவுட் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த முன்னணி பாடகர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை, பாடகி ஸ்ரேயா கோஷல், பாலிவுட் நடிகை திஷா பதானி ஆகியோர் பெயர்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டுகளில் ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர்-எஹ்சான்-லாய், கத்ரினா கைஃப் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு, தீபிகா படுகோன், ஷாருக்கான், அல்லது ரன்வீர் சிங் போன்றவர்கள் தங்கள் நடனத்தால் ரசிகர்களை கவரலாம். மேலும், ஷ்ரத்தா கபூர், வருண் தவான், அரிஜித் சிங், கரண் அவுஜ்லா ஆகியோர் இன்னும் உத்தேச பட்டியலில் உள்ளனர். இன்றைய முதல் போட்டியை போல், அனைத்து இடங்களிலும் தனித்தனியாக விழா நடைபெறுமா அல்லது திரையிடல் மட்டும் செய்யப்படுமா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong