IPL CSKvsRR: பட்லர், படிக்கல் அபாரம்; சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய சென்னை-ராஜஸ்தான் இடையேயான போட்டியில், ராஜஸ்தான் அணி 175 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜாஸ் பட்லர் (52) மற்றும் படிக்கல்(38 ரன்கள்) அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன்(0) டக் அவுட் ஆகி வெளியேறினார். இதில் ஜடேஜா ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
.@imjadeja on ????
He gets the wickets of Devdutt Padikkal and #RR captain Sanju Samson in the same over ???? ????@ChennaiIPL are on a roll here ???? ????
Watch those wickets ????
Follow the match ▶️ https://t.co/IgV0ZtiJJA#TATAIPL | #CSKvRR pic.twitter.com/4KwaPeh420
— IndianPremierLeague (@IPL) April 12, 2023
அதன்பின் இறங்கிய அஷ்வின் அதிரடியாக விளையாடி 30 ரன்களும், கடைசியாக இறங்கிய ஹெட்மயர்(30 ரன்கள்) அதிரடி காட்ட 20 ஓவர்களில் 175/8 ரன்கள் குவித்தனர். சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, தேஸ்பாண்டே, மற்றும் ஆகாஷ் சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.