IPL CSKvsRCB: டாஸ் வென்றது பெங்களூரு அணி; சென்னை அணி முதலில் பேட்டிங்.!
ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs RCB போட்டியில் டாஸ் வென்று, பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. 4 புள்ளிகளைப் பெற்று இரு அணிகளும் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
சென்னை அணி தான் விளையாடிய கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் தோல்வியடைந்துள்ளது, மேலும் பெங்களூரு அணி டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் இன்று களமிறங்குகின்றன. இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர் மோதியதில் சென்னை அணியே 19 முறை வென்று முன்னணியில் இருக்கிறது.
பெங்களூரு அணி 10 முறை மட்டுமே சென்னை அணியை வென்றிருக்கிறது. போட்டி பெங்களுருவில் நடைபெறுவதால் RCB அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி: டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(W/C), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
பெங்களூரு அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸி (C), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(W), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ்