#IPL Breaking: த்ரிபாதி மாஸ் பேட்டிங்; SRH அணி முதல் வெற்றி.!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள், ஹைதராபாத்தில் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசியது.
இதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி, ஹைதராபாத் அணி பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். இதனால் அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். கேப்டன் தவான் மட்டும் நிதானமாக நின்று விளையாடி அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். கடைசிவரை விளையாடிய தவான் 99* ரன்கள் எடுத்தார்.
முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 143/9 ரன்கள் குவித்தது. SRH அணி சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்களும், உம்ரான் மாலிக் மற்றும் யான்சென் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 144 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய SRH அணியில் ஹாரி ப்ரூக் 13 ரன்கள் மற்றும் மயங்க் அகர்வால் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
End of Powerplay!
A wicket for @PunjabKingsIPL as @arshdeepsinghh dismissed Harry Brook.
3⃣4⃣ runs for @SunRisers in the first six overs, with @mayankcricket & @rahultripathi in the middle.
Follow the match ???? https://t.co/Di3djWhVcZ #TATAIPL | #SRHvPBKS pic.twitter.com/Kxqn8gqoTT
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
அதன்பின் களமிறங்கிய ராகுல் த்ரிபாதி(74* ரன்கள்) அதிரடி காட்ட, கேப்டன் மார்க்ரம்(37* ரன்கள்) துணை நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ராகுல் த்ரிபாதி அரைசதமடித்து அசத்தினார். இதனால் ஹைதராபாத் அணி, 17.1 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது, இந்த வெற்றியின் மூலம் SRH அணி ஐபிஎல் 2023 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.