#IPL BREAKING: திக் திக் நிமிடங்கள்; கடைசி பந்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி.!
ஐபிஎல் தொடரில் இன்றைய CSK vs PBKS போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், ருதுராஜ்(37 ரன்கள்) மற்றும் கான்வே(92* ரன்கள்) அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதன்பிறகு துபே (28 ரன்கள்) மற்றும் தோனி(13* ரன்கள்) அதிரடியாக விளையாட சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
Mass ????????#CSKvPBKS #WhistlePodu #Yellove ????????pic.twitter.com/F277rDd2hg
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2023
இதையடுத்து 201 ரன்கள் குவித்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில், பிரப்சிம்ரன் சிங் (42 ரன்கள்) மற்றும் தவான் (28 ரன்கள்) சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன்பிறகு அதர்வா டைடே(13 ரன்கள்) மட்டுமே எடுத்து விக்கெட்டை இழக்க, லியாம் லிவிங்ஸ்டன் (40 ரன்கள்) மற்றும் சாம் கரன்(29 ரன்கள்) அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் குவித்தனர்.
இருந்தும் இவர்கள் இருவரும் விக்கெட்டை இழக்க, பஞ்சாப் அணியில் அடுத்து பேட்டிங் இறங்கிய ஜிதேஷ் சர்மா(21 ரன்கள்) அதிரடி காட்ட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது
சென்னை அணி சார்பில் ஜடேஜா 2 விக்கெட்களையும், மற்றும் தேஷ்பாண்டே 3 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதனால் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது.