ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs RR போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜாஸ் பட்லர் (52) மற்றும் படிக்கல்(38 ரன்கள்) அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன்(0) டக் அவுட் ஆக, அதன்பின் இறங்கிய அஷ்வின் அதிரடியாக விளையாடி 30 ரன்களும், கடைசியாக இறங்கிய ஹெட்மயர்(30 ரன்கள்) அதிரடி காட்ட 20 ஓவர்களில் 175/8 ரன்கள் குவித்தனர்.
சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, தேஸ்பாண்டே, மற்றும் ஆகாஷ் சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 176 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் ருதுராஜ்(8 ரன்கள்) ஏமாற்றமளிக்க, தொடர்ந்து விளையாடிய கான்வே(50 ரன்கள்) அரைசதமடித்தார்.
அதன்பின் களமிறங்கிய ரஹானே அதிரடியாக 31 ரன்கள் குவித்தார். துபே(8 ரன்கள்), மொயின் அலி(7 ரன்கள்) மற்றும் ராயுடு(1 ரன்) என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க ஜடேஜா மற்றும் தோனி களமிறங்கினர். ஆட்டத்தின் இறுதி வரை பரபரப்பாக சென்ற போட்டியில், இருவரும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் விளாச ஆட்டத்தில் மேலும் சூடு பிடித்தது.
கடைசி ஓவரில் 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், முதலிரண்டு பந்துகளும் ஒய்டாக அமைய தோனி, 2 சிக்ஸர் அடிக்க, இறுதியில் சென்னை 17 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில், அஸ்வின் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…