#IPL Breaking: கடைசி வரை சென்ற ஆட்டம்! ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி.!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs RR போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜாஸ் பட்லர் (52) மற்றும் படிக்கல்(38 ரன்கள்) அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன்(0) டக் அவுட் ஆக, அதன்பின் இறங்கிய அஷ்வின் அதிரடியாக விளையாடி 30 ரன்களும், கடைசியாக இறங்கிய ஹெட்மயர்(30 ரன்கள்) அதிரடி காட்ட 20 ஓவர்களில் 175/8 ரன்கள் குவித்தனர்.

சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, தேஸ்பாண்டே,  மற்றும் ஆகாஷ் சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 176 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் ருதுராஜ்(8 ரன்கள்) ஏமாற்றமளிக்க, தொடர்ந்து விளையாடிய கான்வே(50 ரன்கள்) அரைசதமடித்தார்.

அதன்பின் களமிறங்கிய ரஹானே அதிரடியாக 31 ரன்கள் குவித்தார். துபே(8 ரன்கள்), மொயின் அலி(7 ரன்கள்) மற்றும் ராயுடு(1 ரன்) என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க ஜடேஜா மற்றும் தோனி களமிறங்கினர். ஆட்டத்தின் இறுதி வரை பரபரப்பாக சென்ற போட்டியில், இருவரும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் விளாச ஆட்டத்தில் மேலும் சூடு பிடித்தது.

கடைசி ஓவரில் 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், முதலிரண்டு பந்துகளும் ஒய்டாக அமைய தோனி, 2 சிக்ஸர் அடிக்க, இறுதியில் சென்னை 17 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.   ராஜஸ்தான் தரப்பில், அஸ்வின் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்