ஐபிஎல் தொடரின் இன்றைய MIvsKKR போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
MIvsKKR
16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்தது.
185 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சகமாக கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் (100) ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் (20) ரன்கள் எடுத்தனர். அதைப்போல மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹிருத்திக் ஷோக்கீன்2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
186 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை
20 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா (20ரன்கள்) , இஷான் கிஷன் (58ரன்கள்) என மும்பை அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்துவிட்டு தங்களது விக்கெட்களை இழந்தனர்.
இவர்களை தொடர்ந்து சூர்யா குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்கள். இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்த நிலையில், திலக் வர்மா (23ரன்கள்) 13-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியாக சில சிக்ஸர்களை விளாசினார். அவர் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் (43ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹால் வதேரா (6 ரன்கள்) எடுத்து வெளியேறினார்.
இறுதியாக 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 58, சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும், திலக் வர்மா 30 ரன்களும், டிம் டேவிட் 24* ரன்களும், ரோஹித் சர்மா 20 ரன்களும் குவித்துள்ளனர். கொல்கத்தா அணியில் சுயேஷ் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…