ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs KKR போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
16-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், பெங்களுருவில் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, கொல்கத்தா அணியில் முதலில் ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஜேசன் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். நிதிஷ் ராணா அரைசதம் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறினார். முடிவில், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி அரைசதமும் (54 ரன்கள்), அதன்பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டு பிளெசிஸ் (17 ரன்கள்) மற்றும் மேக்ஸ்வெல் (5 ரன்கள்) பெரிதும் ரன்கள் குவிக்காமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பிறகு, மஹிபால் லோமரோர் (34 ரன்கள்) மற்றும் தினேஷ் கார்த்திக் (22 ரன்கள்) பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்து வந்த நிலையில், பெங்களூரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது. முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 179/8 ரன்கள் குவித்தனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ரஸல் மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…