ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs LSG போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, லக்னோ அணியில் முதலில் கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கேஎல் ராகுல் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கைல் மேயர்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினர். இறுதியில், நிக்கோலஸ் பூரன் 45 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 குவித்தது.
இதனையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் வந்தவேகத்தில் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்து பொறுப்பாக விளையாடி வந்த சிக்கந்தர் ராசா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத்தொடர்ந்து, ரவி பிஷ்னோய் தான் வீசிய பந்தில் அதர்வா தைடேவின் விக்கெட்டை எடுத்தார். இந்தபின், களமிறங்கிய லிவிங்ஸ்டன் 23 ரன்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து பேட் செய்யவந்த சாம் கர்ரன் (21 ரன்கள்), ஜிதேஷ் சர்மா (24 ரன்கள்) பொறுப்பாக விளையாடி அணிக்கு ரன்கள் குவித்த நிலையில் தங்களது விக்கெட்டை இழந்தனர். இறுதிவரை போராடிய பஞ்சாப் அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அதர்வ தைடே 66 ரன்களும், சிக்கந்தர் ராசா 36 ரன்களும், ஜிதேஷ் சர்மா 24 ரங்களும் ரன்களும், லிவிங்ஸ்டன் 23 ரன்களும், சாம் கர்ரன் 21 ரன்களும் குவித்துள்ளனர். லக்னோ அணியில் யாஷ் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், நவீன் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…