ஐபிஎல் தொடரின் இன்றைய DC vs RCB போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7:30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, பெங்களூரு அணியில் முதலில் விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். விராட் கோலி மற்றும் மஹிபால் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என அடித்து அரைசதம் விளாசினார். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து, 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் டெல்லி அணியில் முதலில் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் களமிறங்கி நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். டேவிட் வார்னர் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். அவரையடுத்து, மிட்செல் மார்ஷ் களமிறங்கி 26 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
மேலும், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிலிப் சால்ட் அதிகபட்சமாக 87 ரன்கள் வரை அடித்து ஆட்டமிழந்தார். முடிவில், டெல்லி அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி அணியில் அதிகபட்சமாக, பிலிப் சால்ட் 87 ரன்களும், ரிலீ ரோசோவ் 29 ரன்களும், மிட்செல் மார்ஷ் 26 ரன்களும், டேவிட் வார்னர் 22 ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இதுவரை 10-வது இடத்தில் இருந்த டெல்லி அணி, 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…