#IPL BREAKING: 1000-வது ஐபிஎலில் மும்பை அணி வரலாற்று வெற்றி..!

ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs RR போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎலின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையின் வான்கடே மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணியில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன் பொறுப்பாக விளையாடினார். ஆனால், அவரும் சிறிது நேரத்தில் களத்தை விட்டு வெளியேற, கேமரூன் கிரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் கேமரூன் கிரீன் தனது விக்கெட்டை இழக்க, சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார். முடிவில் திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் களத்தில் இருக்க, இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்தநிலையில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்கல் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதனால் மும்பை அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 55 ரன்களும், டிம் டேவிட் 45 ரன்களும், கேமரூன் கிரீன் 44 ரன்களும், திலக் வர்மா 29 ரன்களும், இஷான் கிஷன் 28 ரன்களும் குவித்துள்ளனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 1000 ஆவது போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025