#IPL Breaking: முதல் வெற்றியை ருசித்த மும்பை; ரோஹித், திலக்அபாரம்.!
ஐபிஎல் தொடரின் இன்று டெல்லிக்கு எதிரான போட்டியில் ரோஹித் மற்றும் திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை அணி வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள், டெல்லியின் அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
WOW!
Two excellent shots to produce the same result ????
Tilak Varma departs not before smacking a quick-fire 41 off 29!#TATAIPL | #DCvMI pic.twitter.com/EmiLdpyyc0
— IndianPremierLeague (@IPL) April 11, 2023
இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 51 (47) மற்றும் அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 54 ரன்கள் என அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்காததால், டெல்லி அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மும்பை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் பெஹ்ரண்டோர்ஃப் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியின் ரன் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினார்.
இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் மற்றும் இஷான் நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த இஷான், 31 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கி திலக் வர்மா தனது அதிரடியால் 41 ரன்கள் குவித்தார்.
மறுபுறம் அரைசதம் கடந்த நிலையில் ரோஹித் 65 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி கட்டத்தில் டிம் டேவிட்(13* ரன்கள்) மற்றும் க்ரீன்(17* ரன்கள்) சிக்ஸர்களை பறக்க விட, மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.