ஐபிஎல் தொடரின் இறுதிச்சுற்று போட்டி மழையின் காரணமாக நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று மற்றும் பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இன்று நடைபெறவிருந்த இறுதி சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதவிருந்தன.
இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. ஆனால், மைதானத்தில் மழையானது விட்டுவிட்டுப் பெய்யத் தொடங்கியுள்ளதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, போட்டி 9.35 மணிக்கு தொடங்கும் பட்சத்தில் ஓவர்கள் இழப்பில்லாமலும், போட்டி 11:56 மணிக்கு தொடங்கினால் இரு அணிகளும் ஐந்து ஓவர்கள் கொண்ட ஆட்டத்திலும் விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது.
இதற்கான கட்-ஆஃப் நேரம் நள்ளிரவு 12.06 ஆக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது, மழை விடாமல் பெய்த காரணமாக ஆட்டம் நாளை (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…