#IPL Breaking: கடைசி ஓவர் த்ரில்; குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs GT போட்டியில் குஜராத் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள், மொஹாலியில் ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் மோதினர். டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசியது. இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது.

மேத்தியூ ஷார்ட் 36 ரன்களும், ஜிதேஷ் சர்மா 25 ரன்களும், மற்றும் ஷாருக்கான் 22 ரன்களும் குவித்து பஞ்சாப் அணியை சரிவிலிருந்து மீட்டனர். குஜராத் அணி சார்பில் மோஹித் சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார். 154 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில், சாஹா 30 ரன்களில் ஆட்டமிழக்க கில் அதிரடியாக விளையாடி அரைசதம்(67 ரன்கள்) அடித்தார்.

சாய் சுதர்சன் 19 ரன்கள் மற்றும் கேப்டன் ஹர்டிக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் கில் 67 ரன்களில் ஆட்டமிழக்க, மில்லர்(17* ரன்கள்) மற்றும் திவாட்டியா(5* ரன்கள்) சேர்ந்து இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். முடிவில் குஜராத் அணி, கடைசி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்று, 154 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்