#IPL BREAKING: கடைசி ஓவர் திக் திக்..போராடி வீழ்ந்த கொல்கத்தா..! லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs LSG போட்டியில், லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக, நிக்கோலஸ் பூரன் 58 ரன்களும், குயின்டன் 28 ரன்களும், பிரேரக் மன்கட் 26 ரன்களும், ஆயுஷ் படோனி 25 ரன்களும் குவித்துள்ளனர். கொல்கத்தா அணியில்  வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கொல்கத்தா அணியில் முதலில் களமிறங்கிய ஜேசன் ராய், வெங்கடேச ஐயர் ஜோடி நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இதில் பொறுப்பாக விளையாடிய வெங்கடேச ஐயர் 24 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

சிறுது நேரத்தில் ஜேசன் ராயும் ஆட்டமிழக்க, குர்பாஸ் மற்றும் ரிங்கு சிங் தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் எடுத்தனர். குர்பாஸை தொடர்ந்து கொல்கத்தா அணி வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை இழந்தனர். ஆனால் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் இறுதிவரை போராடியும் அவரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. முடிவில், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 67* ரன்களும், ஜேசன் ராய் 45 ரன்களும், வெங்கடேச ஐயர் 24 ரன்களும் குவித்தனர். லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் மற்றும் யாஷ் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago