#IPL BREAKING: இறுதிவரை போராடிய குஜராத்..! மும்பை அணி அசத்தல் வெற்றி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs GT போட்டியில், மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, மும்பை அணியில் களமிறங்கிய இஷான் கிஷன் (31 ரன்கள்), ரோஹித் சர்மா (29 ரன்கள்) களமிறங்கி பொறுப்பாக விளையாடி நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இறுதியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதமடித்து இன்னிங்ஸை முடித்துவைத்தார். முடிவில், மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விருத்திமான் சாஹா, சுப்மன் கில் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின், களமிறங்கிய விஜய் சங்கர், டேவிட் மில்லர் அதிரடியாக வியாதி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருப்பினும், மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாமால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். கடைசி கட்டத்தில் ரஷித் கான் அதிரடி காட்ட பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் அடித்தார். முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 79 ரன்களும், டேவிட் மில்லர் 41 ரன்களும், விஜய் சங்கர் 29 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை அணியில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா மற்றும் குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.