ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று GT vs MI போட்டியில், குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 129 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28* ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, நேஹால் வதேரா ஜோடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா அதிரடி காட்டி ரன்கள் எடுத்தார்.
வர்மாவுடன் இணைந்து கேமரூன் கிரீன் ரன்கள் எடுத்த நிலையில், திலக் வர்மா 43 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்கி அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். இதன்பின், சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
முடிவில், மும்பை அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், திலக் வர்மா 43 ரன்களும், கேமரூன் கிரீன் 30 ரன்களும் குவித்துள்ளார்.
குஜராத் அணியில் மோஹித் ஷர்மா 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த 2வது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி சென்னை அணியுடன் மோதவுள்ளது.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…