ஐபிஎல் தொடரில் இன்றைய SRH vs DC போட்டியில், டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதன்படி, டெல்லி அணியில் முதலில் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் களமிறங்கினர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக களமிறங்கிய மணீஷ் பாண்டே மற்றும் அக்சர் படேல் அணிக்கு ரன்களை குவித்தனர். முடிவில், டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ஹைதராபாத் அணியில் ஹாரி புரூக், மயங்க் அகர்வால் களமிறங்க, 7 ரன்கள் எடுத்து ஹாரி புரூக் ஆட்டமிழந்தார். ஆனால், அகர்வால் பொறுப்பாக விளையாடி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ராகுல் திரிபாதியும் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு, அபிஷேக் சர்மா மற்றும் மார்க்ரம் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து அணிக்காக பொறுப்புடன் விளைய்டி தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் குவித்து வந்தனர். இந்த நிலையில் 31 அடித்த நிலையில் ஆட்டத்தின் இறுதியில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வாஷிங்டன் சுந்தர் களத்தில் நிற்க டெல்லி அணி சிறப்பாக பந்து வீசி, ஹைதராபாத் அணியை ரன்கள் குவிக்க விடாமல் தடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி, ஹைதராபாத் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 49 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 31 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 24* ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி அணியில் அன்ரிச் நார்ட்ஜே மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…