#IPL BREAKING: இறுதிவரை போராடிய டெல்லி..! ஹைதராபாத் அணி அபார வெற்றி..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய DC vs SRH போட்டியில், ஹைதராபாத் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதன்படி, ஹைதராபாத் அணியில் முதலில் அபிஷேக் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கிளாசென் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா (67 ரன்கள்) மற்றும் கிளாசென் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினர். இறுதியில், கிளாசென் 53 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய டேவிட் வார்னர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால், பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை அரைசதம் அடிக்க, அவருடன் இணைந்து விளையாடிய மிட்செல் மார்ஷும் சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த பிலிப் சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இதன்பின், களமிறங்கிய பிரியம் கார்க் மற்றும் சர்பராஸ் கான் பொறுப்பாக விளையாடிய நிலையில் இருவரும் ஆட்டமிழக்க, அக்சர் படேல் மற்றும் ரிபால் படேல் அணிக்கு ரன்கள் குவித்தனர். இருந்தும் இறுதிவரை போராடிய டெல்லி அணி ரன்கள் 188 மட்டுமே எடுத்தது.

இதனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 63 ரன்களும், பிலிப் சால்ட் 59 ரன்களும், அக்சர் படேல் 29 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி அணியில் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

3 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

3 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

4 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

4 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

5 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

6 hours ago