#IPL BREAKING: பந்துவீச்சில் மிரட்டிய சென்னை..! 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs DC போட்டியில், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, சென்னை அணியில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், கான்வே நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இறுதியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி பொறுப்பாக விளையாடி ரன்களை எடுக்க, மிட்செல் மார்ஷ் வீசிய பந்தில் தங்களது விக்கெட்டை இழந்தனர். முடிவில், சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய வார்னர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பிலிப் சால்ட் 17 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே மற்றும் ரிலீ ரோசோவ் இருவரும் இணைந்து பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
இதன்பின் அக்சர் படேல் சில பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து வந்த நிலையில் மதீஷ பத்திரனாவிடம் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 35 ரன்களும், மணீஷ் பாண்டே 27 ரன்களும், அக்சர் படேல் 21 ரங்களும் குவித்துள்ளனர். சென்னை அணியில் மதீஷ பத்திரன 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.