#IPL Breaking: பெங்களூரு அணி அபார பந்துவீச்சு; டெல்லி அணிக்கு தொடர் தோல்வி.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs DC போட்டியில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

16-வது  ஐபிஎல் தொடரின் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிற நிலையில், 3.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி (50 ரன்கள்), லோம்ரோர்(26 ரன்கள்) மற்றும் கிளென் மேக்ஸ்வெல்(24 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், அதிர்ச்சியாக தொடக்கத்திலேயே பெங்களூரு அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினர். கேப்டன் வார்னர் 19 ரன்களில் ஆட்டமிழக்க, மனிஷ் பாண்டே மட்டும் நிதானமாக விளையாடி அரைசதம்(50 ரன்கள்) அடித்தார். அக்சர் பட்டேல் ஓரளவு நிலைத்து ஆடினாலும், 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் டெல்லி அணி, 20 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே அடிக்க, பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி சார்பில், விஜய்குமார் வைஷக் 3 விக்கெட்களும், சிராஜ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Published by
Muthu Kumar

Recent Posts

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026…

16 minutes ago

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

45 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

58 minutes ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

1 hour ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

1 hour ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

2 hours ago