#IPL Breaking: பஞ்சாப் அணி அசத்தல் பேட்டிங்..! 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய LSGvsPBKS போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 2 போட்டிகள் இன்ற நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணியில், கைல் மேயர்ஸ் (29 ரன்கள்) மற்றும் ராகுல் (74 ரன்கள்) நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். கேப்டன் கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து அணிக்கு ரன்களை குவித்தார். ஆனால் பஞ்சாப் அணியின் பந்துவீச்சால் லக்னோ தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். முடிவில் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதர்வா தைடே, பிரப்சிம்ரன் சிங் லக்னோ அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். மத்தேயு ஷார்ட் ஓரளவு நிலைத்து ஆடினாலும், 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாம் கர்ரன் 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழக்க, சிக்கந்தர் ராசா அரைசதம் அடித்து அசத்தினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஷாரு கான் வெற்றிக்கான இலக்கை எட்டினார்.
இந்நிலையில், பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்து, லக்னோ அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் சிக்கந்தர் ராசா 57 ரன்களும், மத்தேயு ஷார்ட் 34 ரன்களும், ஷாரு கான் 23 ரன்களும், ஹர்பிரீத் சிங் 22 ரன்களும் குவித்துள்ளனர். லக்னோ அணியில் மார்க் வூட், யுத்வீர் சிங் சரக் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதுவரை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 2 போட்டியில் இரு அணிகளும் சமமாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.