IPL 2025 : கேப்டனாக மீண்டும் களமிறங்கும் விராட் கோலி? பெங்களூரு அணியின் புதிய திட்டம்!

2025 ஐபிஎல் சீசனில் RCB அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

virat kohli rcb

பெங்களூர் : ஐபிஎல் 2025 தொடரில் என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் அதிகமாக எழுந்துள்ளது. அதற்கு முக்கியமான காரணமே அணிகளில் பல வகையான மாற்றங்கள் வருகிறது என்பதால் தான். ஏனென்றால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களுடைய அணியில் இந்த வீரர்களை எடுக்கவேண்டும் . அந்த வீரர்களை எடுக்கவேண்டும் என யோசித்துக்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பாகப் பெங்களூர் அணி நிர்வாகமும் சில வீரர்களை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டு வருகிறது. அதைப்போல, கேப்டனையும் மாற்ற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியை விராட் கோலி கேப்டனாக வழிநடத்திச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விராட் கோலி கேப்டனாக செயல்படப்போவது என்பது புதிதான விஷயம் இல்லை. இதற்கு முன்பு 2011 முதல் 2021 வரை பெங்களூர் அணியில் கேப்டனாக கோலி தான் செயல்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை தங்கள் உரிமையால் வெளியிடப்படாத மிகச் சில வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். இதுவரை அவருடைய கேப்டன்சியில் நான்கு முறை பிளேஆஃப்களுக்கு சென்றுள்ளது.

2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் கேப்டனாக செயல்படவில்லை என விராட் கோலி அறிவித்த பின் தற்போது வரை டு பிளெசிஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இந்த சுழலில், அணியை விராட் கோலி மீண்டும் வழிநடத்தினால் சரியாக இருக்கும் என்பதால் இந்த முடிவினை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இன்னும் இது குறித்து அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ இந்த தகவல் விராட் கோலி ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாகவும் அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi