ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ், கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் சில போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சில முக்கியமான வீரர்கள் விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. அப்படி எந்தெந்த வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பும்ரா : மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு சிட்னியில் நடந்த 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயத்தில் இருந்து இன்னும் அவர் காயத்தில் இருந்து குணமாகவில்லை என்ற காரணத்தால் அவர் ஐபிஎல் போட்டி முழுவதுமாக விளையாடுவது என்பது சந்தேகம் தான். கிட்டத்தட்ட 5 ஐபிஎல் போட்டிகள் அவர் விளையாட வாய்ப்புகள் குறைவு தான் எனவும், 5 போட்டிகளுக்கு பிறகு விளையாட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
சாம்சன் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விரல் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், சமீப காலமாக கையில் கூட பெரிய பேண்டேஜ் ஒன்றே போட்டுக்கொண்டு இருந்தார். எனவே இவர் எப்போது குணமாகுவார் எப்போது அணிக்கு திரும்புவார் ? என கேள்விகள் எழும்பிய நிலையில், தற்போது காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்த அவர் உடற்பகுதிக்காக காத்திருக்கிறார். அணி நிர்வாகம் அனுமதி கொடுத்தவுடன் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி விளையாட வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை அனுமதி கொடுக்கப்படவில்லை என்றால் அவர் முதல் 2 போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது.
கே.எல்.ராகுல் : டெல்லி அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட கேஎல் ராகுல் கேப்டன் பதவியே வேண்டாம் எனக் கூறிய நிலையில் அவர் முதல் ஐந்து ஆட்டங்களில் விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு முக்கியமான காரணமே அவருடைய மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது . இந்த நேரத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிற காரணத்தினால் முதல் ஐந்து ஆட்டங்களில் விளையாட வாய்ப்புகள் குறைவு எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மயங்க் யாதவ் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியபோது அவருக்கு மீண்டும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. எனவே , இன்னும் காயம் குணமாகவில்லை என்கிற காரணத்தால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் முதல் பாதி விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா : கடந்த ஆண்டு மெதுவான ஓவர் விகிதத்தை மீறியதால், இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்ச் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் மும்பை அணிக்கு கேப்டன் ஹார்திக் விளையாடமாட்டார்.