ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!
நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை அக்சர் பட்டேல் தலைமை தங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர பணியில் ஐபிஎல் வட்டாரங்கள் இருந்து வருகிறது. இதற்கிடையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதில், ஒரு சில அணிகளுக்கு முரண்பாடு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், டெல்லி அணியில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், டெல்லி அணியின் தற்போதைய கேப்டனான ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி அணியில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், அவருக்குப் பதிலாக அணியின் அனுபவம் வாய்ந்த இடது கை ஆல் ரவுண்டரான அக்சர் பட்டேல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை கேப்டனாக தலைமைத் தங்குவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதற்கு, பண்ட் அணியில் ஒரு வீரராக விளையாடினாள் எதிரணிகளுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும், கேப்டன் பொறுப்பில் இருக்கும் அழுத்தம் இல்லாமல் அவரால் விளையாட முடியும் என்பதற்காகவும் இந்த முடிவை டெல்லி அணி எடுக்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆனாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் இந்த முடிவால் பண்டின் ரசிகர்கள் ஒரு சிலர் சற்று வருத்தத்திலிருந்து வருகின்றனர். ஆனால், ஐபிஎல் தொடரில் இதே போல கேப்டன் மாற்றம் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு தான் என்பது குறிப்பிடத்தக்கது.