ஐபிஎல் 2025 : ஏலத்தில் ஆர்சிபி விடுவிக்கப் போகும் வீரர்கள்! இவரும் உண்டா?

Virat Kohli - Faf Du Plessi

ஐபிஎல் 2025 : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததிலிருந்து அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது. அதற்குக் காரணம் நடைபெறும் போகும் ஐபில் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கான புதிய விதிமுறைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்குச் சமீபத்தில் இதற்கென ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

அதில் அவர்கள் பேசிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் ஒரு சில தகவல்கள் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணிகளுள் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வரும் முக்கிய வீரர்கள் ஒரு சிலரை அந்த அணியின் நிர்வாகம் நடைபெறப் போகும் இந்த மெகா ஏலத்தில் விடுவிக்க உள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.

ஆர்சிபி தக்க வைக்கப் போகும் வீரர்கள் :

  • விராட் கோலி – பேட்ஸ்மேன்
  • ரஜத் படிதார் – பேட்ஸ்மேன்
  • கிளென் மேக்ஸ்வெல் – ஆல் ரவுண்டர்
  • வில் ஜாக்ஸ் – ஆல் ரவுண்டர்
  • முகமது சிராஜ் – பவுலர்
  • யாஷ் தயாள் – பவுலர்

இந்த 6 வீரர்களைத் தவிர மற்ற எல்லா வீரர்களையும் ஆர்சிபி விடுவிக்க உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக இந்த பட்டியலில் அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் டூ பிளெஸ்ஸி மற்றும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் என முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை. இதனால் இருவரையும் பெங்களூரு அணியிலிருந்து விடுவிக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும், இதற்கு முன்னர் மும்பை அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா மும்பை அணியால் விடுவிக்க உள்ளதாகவும் அவரை பெங்களூரு அணி ஏலத்தில் வாங்க உள்ளதாகவும் ஒரு பேச்சு சமீபத்தில் பேசப்பட்டது. அதன்படி இந்த பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒருவேளை அது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இப்படி ஒரு நட்சத்திர ஆல் ரவுண்டரையும், ஒரு பேட்ஸ்மேனையும் விடுவிப்பதால் பெங்களூரு அணியால் அவர்களது வாலட்டை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதற்காகவே இந்த முக்கிய வீரர்களை விடுவிக்கலாம் எனத் தெரிகிறது. பெங்களூரு அணியின் கேப்டனாக டூ பிளெஸ்ஸி செயல் பட்ட இந்த 2 வருடமும் அணிக்குக் கோப்பை வாங்கி தர முடியவில்லை என்றாலும் ஒரு சிறப்பான கேப்டனாகவே செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்