ஐபிஎல் 2025 : “முதல் போட்டியே மும்பை” சென்னை விளையாடவுள்ள போட்டிகள் விவரம் இதோ!
மார்ச் 23ம் தேதி நடக்கும் போட்டியில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மும்பை அணியை எதிர்கொள்கிறது

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் சென்னை விளையாடவுள்ள போட்டிகள் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆரம்பமே அமோகம்
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே தங்களுடைய பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை தான் எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23 மாலை 7:30 மணிக்கு சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னை அணியை போலவே மும்பை அணிக்கும் இந்த ஆண்டு அது தான் முதல் போட்டி. எனவே, போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 37 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. சென்னை அணி 17 முறை வெற்றிபெற்றுள்ளது.
சென்னை விளையாடவுள்ள போட்டிகள்
- மார்ச் 23 (ஞாயிற்றுக்கிழமை) – சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- மார்ச் 28 (வெள்ளிக்கிழமை) – சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
- மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை) – குவஹாத்தி பர்சபரா ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- ஏப்ரல் 5 (சனிக்கிழமை) – சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- ஏப்ரல் 8 (செவ்வாய்கிழமை) – பஞ்சாப் கிங்ஸ் அணியை முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
- ஏப்ரல் 11 (வெள்ளிக்கிழமை) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
- ஏப்ரல் 14 (திங்கட்கிழமை) – லக்னோவின் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- ஏப்ரல் 20 (ஞாயிறு) – மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- ஏப்ரல் 25 (வெள்ளிக்கிழமை) – சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
- ஏப்ரல் 30 (புதன்கிழமை) – பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
- மே 3 (சனிக்கிழமை) – பெங்களூரு எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
- மே 7 (புதன்கிழமை) – கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- மே 12 (திங்கள்கிழமை) – சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- மே 18 (ஞாயிற்றுக்கிழமை) – அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு!
February 19, 2025
PAKvNZ : முடிஞ்சா தொட்டுப்பார்! பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு! மிரட்டிய நியூசிலாந்து!
February 19, 2025
IND vs BAN : இந்தியா vs வங்கதேசம் மேட்ச் எப்படி இருக்கும்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட் இதோ…
February 19, 2025
மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு! பாபர் அசாமை ஓரங்கட்டிய ‘No.1’ கில்!
February 19, 2025