IPL 2025 : இவர்களை தான் தக்க வைக்க போறோம்! குறியீடு கொடுத்த சிஎஸ்கே!
மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தக்க வைக்க போகும் வீரர்களை சூசகமாக சென்னை அணி அறிவித்துள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. மேலும், ஐபிஎல் அணிகள் இந்த ஏலத்திற்காக தக்க வைக்க உள்ள வீரர்களின் இறுதி பட்டியலை நாளை (வியாழக்கிழமை) வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்தது.
அதன்படி, நாளை எல்லா அணிகளும் தங்கள் அணிகளில் தக்க வைக்க போகும் வீரர்களை வெளியிடுவார்கள். இதனால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்படி இருக்கையில், சென்னை அணி நிர்வாகம் நேற்று அவர்களது எக்ஸ் தளத்தில் சூசகமாக இவர்களை தான் தக்க வைக்க போகிறோம் என எமோஜியுடன் பதிவிட்டுள்ளது.
அதில், முக்கிய எமோஜிகளாக ஸ்வாட், ஹெலிகாப்டர், ஸ்டார், ராக்கெட் போன்ற இமோஜிகளை சிஎஸ்கே ரசிகர்கள் குறியீடுகளாக பார்க்கின்றனர். அதன்படி, பார்த்தால் ஹெலிகாப்டர் இமோஜி என்றால், அது தோனியை குறிக்கும். அதே போல, ஸ்வாட் செலிபிரேசனை செய்வதால், அந்த ஸ்வார்ட் எமோஜி ஜடேஜாவை குறிக்கும்.
அடுத்து பவர் ஹிட்டர் என்றால் ஷிவம் துபே, அதற்கு ஏற்றவாறு ஆர்ம்ஸை காட்டி செலிபிரேஷன் செய்வார். இதனால், ஆர்ம்ஸ் என்றால் துபேவாக கருதப்படுகிறது. மேலும், யார்க்கர் பதிரனாவையும், நங்கூரம் எமோஜி மூலம் குறியீடாக தெரிவித்திருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
அதே போல, ருதுராஜ் கெய்க்வாட்டை குறிக்கும் வகையில், குட்டி சிங்கத்தை இமோஜியாக வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த வரிசையில் பார்த்தால், சென்னை அணி தக்க வைக்க போகும் வீரர்கள் யார்யாரென்றால் தோனி, ஜடேஜா, ருதுராஜ், சிவம் துபே மற்றும் பத்திரனா என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
மேலும், ஒரு சில ரசிகர்கள் துபேவுக்கு பதிலாக ரச்சின் ரவீந்திராவை கூறுகிறார்கள். இதனால், நாளை எந்த எந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்க வைப்பார்கள் என்று அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும். இந்த அறிவிப்பை நாளை மாலை 4.30 மணி முதல் பிசிசிஐ வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
????????????????✅????
????????????⚡????????️⚓
????????????????????????
????????????⏳????????
????️⚔️????????????????
The Ones You Seek is Seeking You!Tap the ???? – https://t.co/MNwIFDgxBK
and play the #DeadlineDay now! #WhistlePodu #Retentions2025— Chennai Super Kings (@ChennaiIPL) October 29, 2024