ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே? வெளியான தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடைபெறப் போகும் மெகா ஏலத்தில் தோனி, ருதுராஜ் போன்ற வீரர்களை தக்கவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நாளுக்கு நாள் சென்னை, மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளில் செய்யப் போகும் மாற்றம் குறித்த ஒரு சில தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது அணியில் 5 வீரர்களை தக்க வைக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்களை அணியில் வைத்து விட்டு, சிவம் துபே மற்றும் மதிஷா பத்திரனவை RTM (Right To Match) முறைப்படி அணியில் எடுப்பார்கள் என கூறிவருகிறனர்.
இதனால், ஒரு சில சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் ஒரு சில சிஎஸ்கே ரசிகர்களுக்கு இதை ஏற்று கொள்ள முடியவில்லை என கூறுகிறார்கள். அதற்கு காரணம், அணியில் டெவான் கான்வேவை வைத்து விட்டு அதற்கு பதிலாக சிவம் துபேவை விடுவிக்கலாம் என கூறுகின்றனர். சென்னை அணியில் ருதுராஜ் மற்றும் கான்வே இருவரின் பார்ட்னெர்ஷிப் பல சாதனைகளை ஐபிஎல்லில் செய்திருக்கிறது.
இதனால், இது ஒரு தகவலாக இருந்தாலும் சென்னை அணியின் ரசிகர்கள், கான்வேவை சிஎஸ்கே அணியில் தக்கவைக்க வேண்டுமென பரிந்துரை செய்து வருகின்றனர். மேலும், தோனியை இம்பாக்ட் வீரராக மட்டுமே விளையாட வைக்க உள்ளதாக ஒரு தகவல் சமீபத்தில் பேசப்பட்டது.
அப்படி இம்பாக்ட் வீரராக அவர் விளையாடினால் டேவான் கான்வே அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார். இந்த காரணத்தாலும் காண்வேவை அணியில் தக்க வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் சிவம் துபே ஸ்பின் பவுலிங்கை மட்டுமே குறி வைத்து விளையாடுவதால் அவருக்கென புதிய யுக்திகளை எதிரணி கையாள நேரிடலாம்.
இதனால், அவருக்கு பதிலாக டேவான் கான்வேக்கு ஏலத்தில் முக்கியத்துவம் கொடுக்கலாம் என கூறுகின்றனர். ஆனால், ஜடேஜா, பத்திரனா போன்ற அனுபவம் மற்றும் இளம் வீரர்களை விடுவிப்பதில் சென்னை அணி தயக்கம் காட்டுவார்கள் என கருதப்படுகிறது.
இதனால், நடைபெற போகும் இந்த ஏலத்தை சென்னை அணியின் நிர்வாகம் எப்படி கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் கூடி கொண்டே இருக்கிறது.