ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?
நடப்பு ஐபிஎல் சீசனில் எம்.எஸ். தோனி ஒரு இம்பெக்ட் வீரராக விளையாடினால், விக்கெட் கீப்பராக நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட் போட்டிக்கான (ஐபிஎல் 2025 ) எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டது.
ஆனால், இந்த வரவிருக்கும் சீசனில் தான் அவர் ஒரு கேப்டனாக தனது யுத்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்காடுகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.
ஐபிஎல் 2025க்கான அம்பதி ராயுடுவின் சிஎஸ்கே விளையாடும் பிளேயிங் லெவன் குறித்த விவரத்தை பார்க்கலாம். இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் தொடக்க வீரராகவும் இருப்பார். அவர் ஐபிஎல் 2024 இல் 1 சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 583 ரன்கள் எடுத்தார்.
டெவன் கான்வே, ருதுராஜ் உடன் தொடக்க வீரராக பார்ட்னர் ஷிப் போடுவார். மேலும் எம்.எஸ். தோனி ஒரு இம்பெக்ட் வீரராக விளையாடினால், விக்கெட் கீப்பராக நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன் ராகுல் திருப்பதி சிஎஸ்கே அணிக்காக புதிய மூன்றாவது வீரராக இருக்கலாம்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.3.4 கோடிக்கு வாங்கப்பட்ட அவர், இதுவரை 95 ஐபிஎல் போட்டிகளில் 2200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட ஆல்ரவுண்டர் சிவம் துபே, மிடில் ஆர்டரில் முக்கியமானவராக இருப்பார்.
அவரை தவிர ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா சிஎஸ்கே அணியில் புதிய வீரராக சேர்க்கப்பட்டுள்ளார், அவர் மெகா ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு வாங்கப்பட்டார். மேலும், ஆல்ரவுண்டர் சாம் கரன் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார், அவர் ஏலத்தில் ரூ.2.4 கோடிக்கு வாங்கப்பட்டார்.
ஐபிஎல்லில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கரன் (சுட்டி பையன்) மிகவும் பிடித்தமான வீரராக பார்க்கப்படுகிறது. ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு பெரிய வெற்றி வீரராக பார்க்கப்படுகிறார். அவர் ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
சிஎஸ்கே துணிவுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கிய ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இது ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும், இவரும் அணியில் இருக்கிறார். நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வினுடன் இணைந்து அணியின் சுழற்பந்து வீச்சை வலுப்படுத்துவார். வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது சிஎஸ்கே அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலே குறிப்பிட்ட அனைவரும் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள்.
சிஎஸ்கேவின் முழு அணி
பேட்டர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், ஆண்ட்ரே சித்தார்த்
ரவுண்டர்கள்:
ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், விஜய் சங்கர், சாம் குர்ரன், ராமகிருஷ்ண கோஷ்
சுழற்பந்து வீச்சாளர்கள்:
ரவீந்திர ஜதீஜா, ரவீந்திர ஜதீஜா, ரவீந்திர ஜதிரா
விக்கெட் கீப்பர்கள்:
எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, வான்ஷ் பேடி
வேகப்பந்து வீச்சாளர்கள்:
மதீஷா பத்திரனா, கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அன்ஷுல் கம்போஜ், கமலேஷ் நாகர்கோட்டி, குர்ஜப்னீத்
சிங் ஸ்பின்னர்கள்:
ஆர் அஷ்வின், நூர் அகமது, ஸ்ரேயாஸ் கோபால்