CSK vs MI : சம்பவம் உறுதி! யாருக்கு ஜெயிக்க வாய்ப்பு? சென்னை., மும்பை…
இன்று இரவு நடைபெறும் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு சாதகமான போட்டியாக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025-ன் இந்த 3வது போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு சர்வதேச ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ , அதற்கு சற்றும் குறைவில்லாமல் இப்போட்டி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு அணிகளும் ஐபிஎல்-ல் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல்-ல் ஆண்ட பரம்பரைகள் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அளவுக்கு பலம் பொருந்தியவை ஆகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்குகிறார். எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, பத்திரனா, ரச்சன் ரவீந்திரா போன்ற வீரர்கள் இடம்பெற்றுளளனர். அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பிசிசிஐ ‘தடை’ பெற்றுள்ளதால் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் தற்காலிக கேப்டனாக செயல்படுவார். மேலும், முதன்மை வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் காயம் காரணமாக விளையாட மாட்டார். இதனால் மும்பை அணிக்கு சமநிலை சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம்.
புள்ளி விவரம் :
இதுவரை ஐபிஎல்லில் இரு அணிகளும் 37 முறை மோதியுள்ளன. இதில் மும்பை அணி 20 வெற்றிகளும், சென்னை அணி 17 முறை வெற்றிகளையும் பெற்றுள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
யாருக்கு சதகம்?
சென்னை சேப்பாக்கத்தின் ஆடுகளம் பொதுவாகவே மெதுவாக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும். அதிலும் சுழற்பந்து வீச்சுக்கு மிக உதவியாக இருக்கும். பேட்டிங் இலக்கு 160-170 ரன்கள் அளவுக்கு தான் அதிகம் எடுக்க முடியும். மேலும், சென்னை அணியில் அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது ஆகியோர் இன்றைய போட்டியில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம செப்பமானமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி சென்னை அணி வெற்றிக்கு சாதகமாக சூழலை ஏறப்டுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இருந்தாலும் மும்பை அணியில் அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், மிச்சல் சான்டனர், ட்ரெண்ட் போல்ட், திலக் வர்மா ஆகியோர் அணியினை போக்கை மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
சாத்தியமான பிளேயிங் XI :
சென்னை : கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் , ரச்சின் ரவீந்திரா அல்லது டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, சாம் கரன், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, மதீஷா பதிரனா, கலீல் அகமது ஆகியோர் இடம்பெறுவர் என எதிரிபார்க்கப்படுகிறது.
மும்பை அணி : கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சாண்ட்னர், கார்பின் போஷ்/முஜீப் உர் ரஹ்மான், தீபக் சாஹர், கர்ண் சர்மா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.