ஐபிஎல் 2025 : தக்கவைப்பு விதிகளை வெளியிட தாமதமாக்கும் பிசிசிஐ? வெளியான தகவல்!
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு அனைவரும் எதிர்பார்க்கும் தக்கவைப்பு விதிகளை பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு ஐபிஎல் உரிமையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் காத்திருக்கும் ஒரு விஷயமாக இந்த ஏலமானது இருந்து வருகிறது.
தற்போது இந்த ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகளைச் சொல்லப்போனால் இந்த ஏலத்திற்கான விதிகளை வெளியிடுவது சற்று தாமதமாகலாம் என ஐபிஎல் வட்டாரங்கள் மூலம் கூறப்படுகிறது. அதாவது வரும் செப்டம்பர் 29-ம் தேதி அன்று பெங்களூரில் பிசிசிஐ வருடம் தோறும் நடத்தும் பொதுக் கூட்டத்தில், நடைபெறப் போகும் இந்த ஐபிஎல் தொடருக்கான விதிகள் வெளியிடப்படலாம் என்று கருதப்படுகிறது.
மேலும், அடுத்த வாரத்தில் கூட இந்த விதிகளை பிசிசிஐ அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தலாம் எனவும் ஒரு சில தரப்பினர் கூறி வருகின்றனர். பிசிசிஐ தக்கவைப்பு விதிகளை அறிவித்தாலும், ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தங்களுடைய அணியின் தக்கவைப்பு வீரர்களின் விவரங்களை வெளியிடுவதற்கு நவம்பர் 15 வரை அவகாசம் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில், கண்டிப்பாக ரைட் டு மேட்ச் (RTM) என்ற விதியில் பல ஸ்வாரஸ்யமான மாற்றங்களைக் கொண்டு வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சர்வேதச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 வருடங்கள் தாண்டினால், அந்த வீரர் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பினால் அவரை அன்-கேப்ட் வீரராக ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்ற ஒரு விதியை பிசிசிஐ மீண்டும் கொண்டு வரப்போவதாகவும்.
அந்த விதியை சென்னை அணியின் தூணான எம்.எஸ்.தோனிக்காகவே மீண்டும் கொண்டு வர உள்ளதாகவும் சில தகவல் வெளியானது. இதே போலப் பல ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது ஆனால், இது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் ஐபிஎல்லிருந்தோ அல்லது பிசிசிஐயோ அறிவிக்கவில்லை.
மேலும், இந்த இடைப்பட்ட நாட்களில் தினந்தோறும் ஐபிஎல் நட்சத்திர அணிகள் இந்த வீரர்களைத் தக்கவைக்க உள்ளனர், இந்த வீரரை விடுவிக்க உள்ளனர் என சில ஸ்வாரஸ்யமான பேச்சுகள் ஐபிஎல் வட்டாரங்களிலும், ரசிகர்களிடையேயும் பேசப்படுங்கள் ஐபிஎல் தொடரின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.