IPL 2025 : சென்னை மும்பை போட்டியை மிஞ்சிய பெங்களூர் போட்டி! கோடிகளை அள்ளிய ஜியோ ஹாட்ஸ்டார்!

சென்னை மும்பை போட்டியை விட கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி தான் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

jiohotstar profit

18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் எந்த போட்டி அதிகமான பார்வையாளர்களை பெற்ற போட்டி என்கிற விவரமும் இதன் மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு எவ்வளவு கோடி வருமானம் வந்திருக்கும் என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விரிவாகவும் விவரமாகவும் இந்த பதிவில் பார்ப்போம்..

1. ஆர்சிபி vs கேகேஆர் – 43 கோடி

இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் கொல்கத்தா ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டும் 43 கோடி பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். அது மட்டுமின்றி, இந்த ஆண்டு இதுவரை நடந்த போட்டியில் அதிகம் பார்வையாளர்களை கடந்த போட்டியும் இது தான் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதன் மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் கோடியில் லாபம் பார்த்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

எவ்வளவு லாபம் ? 

43 கோடி பேர் பார்த்ததால் JioHotstar-க்கு விளம்பரம், சந்தா மூலம் மொத்தம் ரூ.90-115 கோடி பணம் வந்திருக்கலாம்.அதில், அதை ஒளிபரப்ப செலவு ரூ.75-90 கோடி வரை இருக்கும். எனவே,வந்த பணத்தில் செலவைக் கழித்து பார்த்தால் ரூ.15-25 கோடி மீதி இருக்கும். அதுதான் இந்த போட்டியின் மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு கிடைத்த லாபம் எனவும் கூறப்படுகிறது.

IPL போட்டிகளை ஒளிபரப்ப JioHotstar (Reliance) 5 ஆண்டுகளுக்கு ரூ.23,758 கோடி கொடுத்து உரிமை வாங்கியது. ஒரு சீசனுக்கு 74 போட்டிகள் என்றால், ஒரு போட்டிக்கு சுமார் ரூ.70-80 கோடி செலவு வரும். பார்வையாளர்களை பெற பெற தான் தினம் தினம் வசூலும் அதிகமாக வரும். இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் முடியும் போது மொத்தமாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு எவ்வளவு கோடி லாபம் வரும் என்பது தெரிய வரும்.

2. சென்னை VS மும்பை – 31 கோடி 

ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் மிகவும் அதிகம் எதிர்பார்க்கும் போட்டிகள் என்றால் சென்னை மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் எல் கிளாசிகோ போட்டியை தான். எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டும் 31 கோடி பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இதன் மூலம் JioHotstar-க்கு தோராயமாக ரூ10.8 முதல்18 வரை கோடி லாபம் கிடைத்திருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

3.ஹைதராபாத் VS ராஜஸ்தான் 29 கோடி

ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியும் மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்ற ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் போட்டியில் மோதிக்கொண்டது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் 29 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். எனவே, SRH vs RR போட்டியை 29 கோடி பேர் பார்த்திருந்தால், JioHotstar-க்கு தோராயமாக ரூ10.1 முதல் 16.8 கோடிகள் வரை லாபம் கிடைத்திருக்கலாம். இது விளம்பரம், சந்தா வருவாய் மற்றும் ஒளிபரப்பு செலவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்