ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் குறி வைக்கும் 3 ஒப்பனர்கள்!

நடைபெற போகும் ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் 3 நட்சத்திர வீரர்களை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

IPL - Mumbai Indians

சென்னை : அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இந்த ஆண்டின் இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்க்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் ஐபிஎல் தொடர் பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வரப்போகும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு மும்பை அணியில் அபிஷேக் சர்மா, பில் சால்ட் மற்றும் கே.எல்.ராகுல் என 3 நட்சித்திர ஓப்பனர்களை குறி வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை அணி ஏலம் என்றாலே நட்சத்திர வீரர்களை குறி வைத்து எடுப்பதில் வல்லவர்கள் என்றே நாம் கூறலாம். எப்படி ஒரு நட்சத்திர வீரர்களுக்கு இந்த முக்கிய துவம் கொடுக்கிறார்களோ அதே போல திறமை உள்ள இளம் வீரர்களாக்கும் அந்த ஒரு முக்கிய துவம் கொடுப்பார்கள்.

இது போல மும்பை அணி ஏலத்தில் பார்ப்பதால் தான் ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணமாகும். தற்போது, கே.எல்.ராகுல், பில் சால்ட் மற்றும் அபிஷேக் சர்மா என அதிரடி வீரர்களை மும்பை இந்தியன்ஸ் குறிவைத்துள்ளது. இந்த 3 வீரர்களுக்கும் மெகா ஏலத்தில் போட்டிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கே.எல்.ராகுல் :

கே.எல்.ராகுலுக்கு கடந்த ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை என்றாலும் ஒரு சில போட்டிகளில் அவர் அவரது ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினார். மேலும், அவர் அனுபவம் வாய்ந்த சீனியர் என்பதால் அவரை மும்பை அணி குறிவைக்கலாம் என கூறப்படுகிறது.

பில் சால்ட் :

அதே போல, பில் சால்ட் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு பேசும் பொருளாக அமைந்திருந்தார். கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடிய இவர் இந்த தொடரில் 435 ரன்கள் அடித்திருந்தார். இதனால், கொல்கத்தா அணி இந்த ஏலத்தில் அவரை விடுவித்தாள் மும்பை அணி அவரை எடுக்க முற்படுவார்கள் என தெரியவந்துள்ளது.

அபிஷேக் சர்மா :

அபிஷேக் சர்மா, நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணியின் தூணாகவே அமைந்தார். மேலும், அதிரடி வீரரான இவரை ஹைதராபாத் அணி வெளியில் விட்டு எடுப்பதற்கு வாய்ப்புகள் மிக கம்மி தான். ஆனால், ஒரு வேளை அவரை விடுவித்தால் அவருக்கு ஒரு பிரத்யேக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்த போட்டியில் மும்பை அணி அவரை எடுக்கலாம் என கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin