ஐபிஎல் 2025 : உரிமையாளர்களால் விடுவிக்க போகும் 3 கேப்டன்கள்? வெளியான தகவல்..!
ஐபிஎல் : ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கு முன்பும் மினி ஏலம் நடத்தப்படும் போதே அதில் புதிதாக அமையும் அணியின் மாற்றம் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் என அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும். அதே போல 5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் மெகா ஏலத்தின் போதும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கண்ணும் நடத்தப்படும் அந்த ஏலத்தின் மீது தான் இருக்கும்.
மெகா ஏலத்தின் சுவாரஸ்யமே எந்த வீரர் எந்த அணிக்காக விளையாடுவார், எந்த வீரர் அதிக தொகைக்கு ஏலத்தில் சொல்லப்போகிறார் என்ற ஆர்வம் நமக்கு இருந்து கொண்டே இருக்கும். இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது.
இந்த மெகா ஏலத்தில் எந்த அணியில் எந்த வீரர்கள் விடுவிக்க போறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. மேலும், இது பற்றிய ஒரு சில ஷாக்கிங்க்கான தகவல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கொண்டு ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் ஐபிஎல் அணிகளில் கேப்டனாக தற்போது இருக்கும் 3 வீரர்களை, அந்தந்த அணிகள் விடுவிக்க உள்ளதாக ஒரு ஷாக்கான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக தற்போது இருக்கும் கே.எல்.ராகுல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஷிகர் தவான்.
இந்த 3 அணியின் கேப்டன்களையும் அந்தந்த அணியின் உரிமையாளர்கள் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி ரசிகர்கள் கூறுவது என்னவென்றால் ஏற்கனவே லக்னோ அணிக்கும் கே.எல். ராகுலுக்கும் ஒரு சலசலப்பு இருந்து வருவது தெரியும்.
இதனால் தான் கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலக உள்ளதாக கூறுகிறார்கள். பெங்களூரு அணியிலும் புதிய கேப்டனாக வேறு யாராவது நியமிக்க வேண்டும் என்பதற்காக விடுவிக்க உள்ளதாக தெரிகிறது. அதே போல, பஞ்சாப் அணியில் எப்போதுமே புதிதாக அணியை மாற்றுவதால் ஷிகர் தாவனை விடுவிக்க ஒரு முடிவெடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் இது பற்றிய ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள். மேலும், அடுத்த ஆண்டுக்கான மெகா ஏலத்திற்கும் மற்றும் ஐபிஎல் தொடருக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இப்போதிலிருந்தே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.