IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் ..! முதல் மூன்று இடத்தில் இவர்கள் தான் ..!
IPL 2024 : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர அணியாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான அணியாக பெங்களூரு அணி இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஐபிஎல் அணிகளில் ஒரு கேப்டனாக அதிக முறை பெங்களூருவை வீழ்த்திய முதல் மூன்று கேப்டன் யாரென்று பார்க்கலாம்.
Read More :- WPL 2024 : கேப்டன் ஸ்மிருதியின் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி ..! தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு ..!
கவுதம் கம்பிர் :
கவுதம் கம்பிர் தலைமையில் பெங்களூ அணியை மொத்தம் 9 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த 9 வெற்றிகளில், 2 வெற்றிகளை கவுதம் கம்பிர் டெல்லி அணிக்கு கேப்டனாக இருக்கும் போதும், மீதம் உள்ள 7 வெற்றிகளும் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருக்கும் போதும் பெற்றார். மேலும், இவரது ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரான 93 ரன்களை பெங்களூரு அணிக்காக அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிகளின் மூலம் கவுதம் கம்பிர் 3-வது இடத்தில உள்ளார்.
ரோஹித் சர்மா :
2011-ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் மும்பை அணியில் இடம்பெற்ற ரோஹித் சர்மா, 2013 -ம் ஆண்டு முதல் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இவர் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு பெங்களூரு அணியை மொத்தம் 11 போட்டிகளில் வென்றுள்ளார். இந்த இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியானது எப்பவுமே விறுவிறுப்பாகவே இருக்கும். 11 போட்டிகளின் வெற்றியின் மூலம் பெற்று ரோஹித் இந்த பட்டியலில் 2-வது இடத்தில உள்ளார்.
Read More :- புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு
எம்.எஸ்.தோனி :
2008 முதல் தற்போது வரை சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஒரே வீரர் தோனி தான். அவ்வப்போது, ஏதேனும் ஒரு சில போட்டியில் சென்னை அணிக்காக வேறு சில வீரர்களும் கேப்டனாக செயல்பட்டதும் உண்டு. இவர் சென்னை அணி கேப்டனாக, பெங்களூரு அணியை மொத்தம் 19 முறை வென்றுள்ளார். இந்த வெற்றிகளின் மூலம், இந்த பட்டியலில் கேப்டன் எம்.எஸ்.தோனி முதலிடத்தில் உள்ளார். பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடக்கும் ஒவ்வொரு போட்டியும் களத்தில் அனல்பறக்கும் சம்பவமாகவே நடைபெறும்.