ஐபிஎல் 2024 : பேட்டிங் செய்ய களமிறங்கும் ஹைதராபாத்..! சமாளிக்குமா குஜராத்?
ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரின் 12வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளதாக அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.
இந்த சீசனீல் இதுவரையில் நடந்த 11 போட்டிகள் முடிவுகளின் படி அந்தந்த ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் இரு அணிகளும் மோதிய, 3 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டியிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
SRH அணி விபரம்: எம்.அகர்வால், டி.ஹெட், ஏ. ஷர்மா, ஏ.மார்க்ரம், எச்.கிளாசென்(விக்கெட் கீப்பர்), ஏ.சமத், எஸ்.அஹமது, பி கம்மின்ஸ் (கேப்டன்), பி.குமார், எம்.மார்கண்டே, ஜே.உனத்கட்
GT அணி விபரம்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்) சுப்மன் கில் (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், நூர் அகமது, மோஹித் ஷர்மா, தர்ஷன் நல்கண்டே