KKRvsSRH: புதிய மைல்கல்லை எட்டிய நடராஜன்

T Natarajan: ஐபிஎல் கிரிக்கெட்டில் 50வது விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்களை அவர் வீழ்த்தியிருக்கிறார்.

Read More – PBKSvDC: சாம் கரண் அதிரடி… டெல்லியை வீழ்த்திய பஞ்சாப்..!

2024 ஐபிஎல் சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக இருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது யார்க்கர் பந்துவீச்சுக்காக நன்கு அறியப்படுபவர். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை வீழ்த்தியது அவரின் 50வது விக்கெட்டாக அமைந்தது.

Read More – KKRvsSRH : பேட்டிங் செய்ய களமிறங்கும் கொல்கத்தா ..! தடுத்து நிறுத்துமா ஹைதராபாத் ?

இப்போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது தகுதியை மீண்டும் ஒருமுறை நடராஜன் நிரூபித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டிய நடராஜனுக்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்