IPL 2024 : அச்சச்சோ ..சென்னை அணிக்கு முதல் அடி ? ஐபிஎல்லிருந்து வெளியேறினார் கான்வே..!
IPL 2024 : இந்த ஆண்டின் ஐபிஎல்-17-வது சீசன் தொடரானது வருகிற மார்ச் -22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பறிச்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே, நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
Read More :- IPL 2024 : பயிறிச்சியில் CSK வீரர்கள் ..! ரசிகர்கள் உற்சாகம் ..!
டேவன் கான்வே, சென்னை அணிக்காக மிக சிறப்பாக விளையாடும் ஒரு தொடக்க வீரர் ஆவார். இவர் தற்போது, ஆஸ்திரேலியாவுடனான சுற்று பயணத்தில் விளையாடி வந்தார். ஆஸ்திரேலியாவுடனான டி20 போட்டியில் இவர் விளையாடும் போது இடதுகை கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த டி20 தொடரிலிருந்து முதலில் வெளியானார்.
அதன் பின் அவரது உடற் தகுதி குறித்தும், ஐபிஎல்லில் சென்னை அணிக்காக அவர் தயாராக இருப்பாரா என்றெல்லாம் ரசிகர்களிடம் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டது. தற்போது, ரசிகர்களுக்கு விடை அளிக்கும் வகையில் இடதுகை கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து வருகிற மே மதம் வரை தற்காலிகமாக விலகி உள்ளார் என தகவல் தெரிய வந்துள்ளது.மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சென்னை போட்டிகளில் இவர் விளையாடமாட்டார்.
Read More :- IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?
ஆனால், மே மாதத்தில் நடைபெறும் சென்னை போட்டிகளில் இவர் கலந்து கொள்வாரா என்று நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், சென்னை அணியின் இந்த வருடம் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து அணியின் இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவிற்கும் அந்த டி20 தொடரில் சிறிய காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் அதிலிருந்து மீண்டு தற்போது ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்களில் விளையாடி வருகிறார்.