IPL 2024 : தென்னாபிரிக்காவின் வேக பந்து வீச்சு ஜாம்பவானான டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் அணியில் சன் ரைசேர்ஸ் ஹைட்ரபாத் அணிக்காக விளையாடினார். சர்வேதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்ற பிறகும் ஐபிஎல்லில் பெங்களூரு, ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு ஐபிஎல்லிருந்து ஓய்வு பெற்று ஹைதராபாத் அணிக்காக தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.
தற்போது, தொடங்கவிருக்கும் IPL 2024 ஆண்டிற்கான ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சிலிருந்தும் இந்த வருடம் ஓய்வு பெற உள்ளார். அவர் அடுத்த வருடம் நடைபெறும் 2025- ஆண்டின் IPL தொடரில் மீண்டும் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைவார்.
ஐதராபாத் அணிக்காக ஐபிஎல்லில் இருந்து ஒரு சீசனில் ஓய்வு எடுக்கும் இரண்டாவது SRH பயிற்சியாளர் ஸ்டெயின் ஆவார். இவருக்கு முன் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான டாம் மூடி ஐபிஎல் 2020 தொடரிலிருந்து ஓய்வு எடுத்து, அதன் பின் ஐபிஎல் 2021 தொடரில் மீண்டும் இணைந்தார். இந்த மாற்றம் SRH (சன் ரைசேர்ஸ் ஐதராபாத்) அணிக்கு இடியாக அமையுமா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
டேல் ஸ்டெய்ன், 2016-ம் ஆண்டில் ஐதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற போது அந்த அணியில் பங்காற்றினார். தற்போது ஸ்டெய்னுக்கு பதிலாக நியூஸிலாந்து அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான டேனியல் வெட்டோரி தலைமை பயிற்சியாளராக இணைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகிறது. அவருடன் சைமன் ஹெல்மெட், ஹேமங் பதானி, முத்தையா முரளிதரன் மற்றும் ரியான் குக் உள்ளிட்ட பலர் துணை பயிற்சியாளராக பணியாற்றுவார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…