இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டே வரும் நிலையில் முதல்பாதியில் நடைபெறும் சில போட்டிகளுக்கான அட்டவணையை இன்று மாலை வெளியிடுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரருமான முகமது சமி வரவிருக்கும் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து வெளியேறி உள்ளார் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸின் நட்சத்திர வீரரான முகமது சமியின் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய லண்டன் செல்லும் காரணத்தால் அவர் வருகின்ற ஐபிஎல் தொடரிலிருந்து வெளியாகி உள்ளார் என தகவல்கள் தெரிகிறது. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.
அந்த தொடரில் முகமது சமி, குஜராத் அணிக்காக 20 விக்கெட்டுகளை கைப்பற்றி குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல பெரும்பங்காற்றினார். அதன் பின் கடந்த 2023-ம் ஆண்டு குஜராத் அணிக்காக அவர் 28 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். தற்போது, கணுக்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியாகி உள்ளதாக தெரிகிறது.
இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கும் பேர் இடியாக அமைந்திருக்கிறது. இருந்தாலும், குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்தும், பிசிசியிடமிருந்தும் (BCCI) எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…