#IPL 2024 : அசத்தலான மாற்றத்தை செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ..!
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டப்படும் தொடர், இந்தியாவில் நடை பெற்று வரும் ஐபிஎல் தொடராகும். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் என்பது நடைபெறும். இந்த ஆண்டுக்கான மினி ஏலமும் துபாயில் தற்போது முடிவடிந்திருந்தது. ஐபிஎலில் கலந்து கொள்ள போகும் 10 அணிகளும் தங்களது ஏலத்தில் சிறப்பான வீரர்களை வாங்கி உள்ளது.
ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..!
கலந்து கொள்ள போகும் 10 அணிகளும் வலுவான நிலையில் இருந்து வரும் நிலையில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் கூடி கொண்டே வருகிறது. இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். அந்த அணியில் முன்னதாகவே இருந்த வேக பந்து வீச்சாளரான மார்க் வுட் இடத்திற்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வேக பந்து வீச்சாளரான ஷாமார் ஜோசப் இடம்பெற்றுகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஷாமார் ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே ஸ்டீவன் ஸ்மித்தை வெளியேற்றினார். முதல் ஆட்டத்தில் அடிலெய்டில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசுக்கு 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்தார் ஷாமார் ஜோசப்.
அந்த ஆட்டத்தின் போது காலில் காயம் இருந்த போதிலும், இறுதி வரை பந்து வீசி ஏழு விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த ஆட்டத்திற்கு பிறகு இவர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்தார். ஏனென்றால், 1997-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் வெஸ்ட் இண்டீஸ் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2022 ஆண்டு ரூ.7.50 கோடிக்கு மார்க் வுட்டை ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், தற்போது, இங்கிலாந்து வேக பந்து வீச்சாளரான மார்க் வுட் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை முழங்கை காயம் காரணமாக தவறவிட்டிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு பதிலாக ஷாமார் ஜோசபை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 கோடிக்கு எடுத்துள்ளனர்.