#IPL 2024 : சபாஷ் சரியான போட்டி ..! சர்ஃபராஸ் கானுக்கு போட்டி போடும் ஐபிஎல் அணிகள் ..!
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டியில் சமீபத்தில் அறிமுகமான இந்தியாவின் இளம் வீரரான சர்ஃபராஸ் கான் கலக்கி கொண்டு வருகிறார். அவர் விளையாடிய 3-வது டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் விளாசி அசத்தினார். அவரது இந்த சிறப்பான அறிமுகத்தை தொடர்ந்து அவரை மார்ச்-22 ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்ய ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.
யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..!
அதிலும் ஐபிலில் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் ஒப்பந்தம் செய்ய முன்வருவதாக தகவல் தெரிகிறது. ஆனால், சர்ஃபராஸ் கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்காலி பத்திரிகையான ஆனந்த பஜார் பத்ரிகாவின் அறிக்கையின் படி, கொல்கத்தா அணியின் புதிய மெண்டராக (வழிகாட்டியாக) இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் சர்ஃபராஸ் கானை கொல்கத்தா அணியில் எடுப்பதற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிய வருகிறது.
சர்ஃபராஸ் கான், 2015-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி மூலம் ஐபிஎலில் அறிமுகமானார். . அதன்பின் 2019-ம் ஐபிஎல் சீசனுக்கு முன் ஆர்சிபி (RCB) -யால் விடுவிக்கப்பட்டார். பிறகு பஞ்சாப் அணி அவரை அடுத்த சீசனான 2020 -ல் வாங்கியது. பிறகு 2022-இல் விடுவித்தனர்.
அதன் பின் பிப்ரவரி 2022-ம் ஆண்டு சர்ஃபராஸ் கானை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் வாங்கினார்கள். இறுதியாக ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக, டெல்லி அணி சர்ஃபராஸ் கானை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு விடுத்துள்ளது. தற்போது அவரை தங்களது அணியில் எடுக்க போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவுப்பு தெரியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.