#IPL 2024 : சென்னையில் முதல் போட்டி ..!  வெளியானது ஐபிஎல் அட்டவணை..!

இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என அதிகார பூர்வ அறிவுப்பு வெளியாகியது.  எல்லா ஆண்டும் வழக்கமாக ஐபிஎல் தொடங்கும் முன் இரு மாதங்களுக்கு முன்பே அதற்கான அட்டவணை வெளியாகி விடும். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் போட்டியின்  அட்டவணையை சற்று தாமதமாக வெளியிட்டுள்ளனர்.

Read More : – #IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் சமி ? அப்போ குஜராத் கதி ..?

இதில் சென்னையில் முதல் போட்டி நடக்க போவதாகவும், சென்னையும், குஜராத் அணியும் முதல் போட்டி விளையாட போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள அட்டவணையில் முதல் போட்டியாக வருகிற மார்ச்-22ம்  தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது.

ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் தெரிவித்தது போல ஐபிஎல் தொடரின் அட்டவணையில் பாதி போட்டிக்கான அறிவிப்பை மட்டும் வெளியிட்டுயுள்ளனர். அந்த அட்டவணையில் மார்ச் -22 முதல் ஏப்ரல் – 7 ம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மட்டும் வெளியாகி இருக்கிறது. மீதம் நடைபெறும் போட்டிக்கான அட்டவணையை நாடுளுமன்ற தேர்தலின் தேதியை அறிவித்ததற்கு பிறகு வெளியிடுவார்கள். மொத்தம் 17 நாட்களில் 21 போட்டிகள் நடைபெற உள்ளது.

Read More : – #IPL 2024 : சபாஷ் சரியான போட்டி ..! சர்ஃபராஸ் கானுக்கு போட்டி போடும் ஐபிஎல் அணிகள் ..!

தற்போது, வெளியிட்டுள்ள இந்த  அட்டவணையின் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த 4 போட்டிகளில் முதல்  இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கத்திலும் அடுத்த இரண்டு போட்டிகள் வைசாக் மற்றும் ஐதராபாத்திலும் விளையாடவுள்ளது. ஐபிஎல்-ன் முதல் போட்டி சென்னையில் நடைபெறுவதால் சென்னை அணியின் ரசிகர்கள் தல தோனியின் தரிசனத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர்.

சென்னை அணியின் போட்டிகள் : 

  • சென்னை vs பெங்களுரு – மார்ச் 22 – சேப்பாக்கம்
  • சென்னை vs குஜராத்         – மார்ச் 26 – சேப்பாக்கம்
  • டெல்லி vs சென்னை          – மார்ச் 31 – வைசாக்
  • ஐதராபாத் vs சென்னை   – ஏப்ரல் 5 – ஐதராபாத்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்