இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இதனால், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியில் பஞ்சாப், சென்னை அணிகள் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அணியிலிருந்தும் ஸ்வாரஸ்யமான தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
கடந்த மார்ச் 2-ம் தேதி அன்று ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் வேக பந்து வீச்சளரான ஸ்டெய்ன் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த வருட ஐபிஎல் தொடரில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, சென்ற வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் வீரரான எய்டன் மார்க்ரம் செயல்பட்டார்.
தற்போது, இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ் நியமிக்கபட்டுள்ளார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது குறிப்பிடதக்கது . மேலும், பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டு கடந்த வருடம் 2023-ல் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற, செயல் திறனை கருத்தில் கொண்டு SRH அணி இந்த முடிவை எடுத்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்களில் பேட் கம்மின்ஸ் (ரூ20.50 கோடி-ஐதராபாத்) இரண்டாவது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் (ரூ.24.75 கோடி – கொல்கத்தா ) முதலிடத்திலும் உள்ளார். இந்த முக்கிய மாற்றத்தால் இந்த தொடரில் ஹைதராபாத் அணி சிறந்து விளங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…