IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?

Pat Cummins [file image]

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இதனால், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியில் பஞ்சாப், சென்னை அணிகள் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அணியிலிருந்தும் ஸ்வாரஸ்யமான தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு முதல் அடி ..?

கடந்த மார்ச் 2-ம் தேதி அன்று ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் வேக பந்து வீச்சளரான ஸ்டெய்ன் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த வருட ஐபிஎல் தொடரில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, சென்ற வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் வீரரான எய்டன் மார்க்ரம்  செயல்பட்டார்.

Read More :- ரஞ்சிக் கோப்பை அரையிறுதி! திணறும் தமிழ்நாடு அணி: வலுவான நிலையில் மும்பை

தற்போது, இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ் நியமிக்கபட்டுள்ளார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது குறிப்பிடதக்கது . மேலும், பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டு கடந்த வருடம் 2023-ல் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More :- ‘புத்தகம் எழுதினாலும் அதிலும் ஃபினிஷிங் தோனி தான்’ .. – ஆகாஷ் சோப்ரா புகழாரம்

இதுபோன்ற, செயல் திறனை கருத்தில் கொண்டு SRH அணி இந்த முடிவை எடுத்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்களில் பேட் கம்மின்ஸ் (ரூ20.50 கோடி-ஐதராபாத்) இரண்டாவது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் (ரூ.24.75 கோடி – கொல்கத்தா ) முதலிடத்திலும் உள்ளார். இந்த முக்கிய மாற்றத்தால் இந்த தொடரில் ஹைதராபாத் அணி சிறந்து விளங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்